காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்காக லண்டனில் திரண்ட குரல்கள்: சர்வதேச சமூகத்திற்கு அவசர அழைப்பு!

லண்டன்: சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் நிலை தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி, நாடுகடந்த தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, பின்னர் பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள 10 Downing Street நோக்கி நடைபயணமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அவர்களது உறவினர்களின் நிலை தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பல ஆண்டுகளாக தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் நிலை குறித்து பதில்களை எதிர்பார்த்து வரும் குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டவர்கள், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், நீதியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

குறிப்பாக, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான சர்வதேச விசாரணை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பதாகைகள் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் இடம்பெற்ற காணாமலாக்கல்கள் தொடர்பில் சர்வதேச கவனம் தொடர வேண்டியதன் அவசியத்தையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி, காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் பல தசாப்தங்களாக காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களின் நிலை குறித்து பெருமளவான குடும்பங்கள் இன்னமும் பதில்களை எதிர்பார்த்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்