முல்லைத்தீவில் சோகம்: விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு!

முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளை சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த உறுப்பு தானத்தின் மூலம், இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாய், கடந்த பதினைந்தாம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.

குறித்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக தீவிர சிகிச்சைக்காக உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன், அவரது இரண்டு சிறுநீரகங்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தானமாக வழங்கப்பட்டன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!