மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

இன்றுடன் பூர்த்தியாகும் தனது சிறைவாசத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

நாட்டின் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், மக்களின் குறைகளில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்காகத் தனது சிறைவாசத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களுக்கு உண்மையான பொருளாதாரச் நிவாரணம் கிடைக்குமானால், 50 அல்ல 500 நாட்கள் கூடச் சிறையில் இருக்கத் தான் தயார் என நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், எரிபொருளை இறக்குமதி விலையிலேயே வழங்குதல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துதல், பிணையும் வட்டியும் இன்றி வங்கிக் கடன்களை வழங்குதல், டோயோட்டா விட்ஸ் (Toyota Vitz) கார்களை சுமார் 12 இலட்சம் ரூபாய்க்குப் பெற வழிசெய்தல், அரிசி விலையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை முழுமையாக நீக்குதல் போன்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுமானால், தனது சிறைவாசத்தை ஒரு பயனுள்ள தியாகமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில், திறைசேரி நிரம்பி வழிகிறது என்று கூறப்படும் நாட்டில் தாம் வாழ்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குடும்பத்தைக் இலக்கு வைப்பதன் மூலம் நாட்டின் கடுமையான பிரச்சினைகளை மூடிமறைத்துவிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் இறுதியில் தன்னை நிரபராதி என விடுவிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், தனது சிறைவாசம் தனது அரசியல் எண்ணங்களை முடக்கிவிடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணம் குறித்து நினைவுகூர்ந்துள்ள நாமல், “உண்மையான வெற்றி என்பது அதிகாரத்தில் இல்லை; மக்களின் இதயங்களில் பிடிக்கும் இடத்தில்தான் உள்ளது” என்பதைத் தனது தந்தை கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டினதும் மதத்தினதும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ‘காவன்திஸ்ஸ’ யானை தொடர்பான சர்ச்சை குறித்துக் கவலை வெளியிட்டுள்ளதுடன், நாட்டின் கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டின் முதல் குடிமகனுக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்னைச் சிறையில் அடைக்க முடிந்தாலும், எம்முடன் நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறைபிடிக்க முடியாது” எனக்கூறி அவர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!