குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
