மக்களின் காணி மக்களுக்கே: வலி வடக்கில் நில விடுவிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

அண்மையில் ஜனாதிபதி அனுர தலைமையில் இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் செப்டெம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!