‘சிரிலிய சவிய’ வழக்கு: சிரந்தி ராஜபக்ஷவிற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை!

சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபா பணம் சட்டவிரோதமான முறையில் ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ShootingIncident
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!
CigarettePrices
உலகிலேயே மிக அதிக விலையுள்ள சிகரெட் கொண்ட நாடாக இலங்கை: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வில் வெளிவந்த தகவல்!
PrisonShooting
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!
NamalRajapaksa
"தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு": நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!
UKTamils
பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!