வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தி உள்ளது. 

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த உறுப்பினர் தனது உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!