இஷாரா தலைமறைவாகியிருக்க உதவிய கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது!

தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தினுடான பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர் தலைமறைவாகியிருக்க உதவி புரிந்தமை தொடர்பில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார்.

அதன்படி, மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என அவர் தங்கியிருந்த பகுதிகளில் உதவி புரிந்தவர்கள் கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இஷாரா தங்கியிருந்த பகுதிகளுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!