காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்புக்குள் உடம்பிற்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து நாகைபட்டினம் பயணிக்பும் பயணிகள் பலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் 26 பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்த பயணிகளில் 26 பேர் பயணிக் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உள்பட 9 இலங்கையரும் உள் அடங்குகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டபோதும் 17 பேரே போதனா வைத்தியசாலை அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஆறு பேர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நாலு ஆண்கள் இந்தியர்களும் இரண்டு பெண்கள் இலங்கையர்களும் உள்ளடங்குவார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!