தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்

தாயகத்தின் இளம் சாதனையாளரின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், சுவிட்சர்லாந்தில் வாழும் பிரபல தொழிலதிபரும், தாரணி சுப்பர் மார்க்கெட் உரிமையாளருமான திரு. சிவஞானம் ஸ்ரீகுகன் அவர்களின் பெருவிருப்பிற்கு இணங்க, செல்வன் சபினுக்குப் பெறுமதிமிக்க தங்கக் கைச்சங்கிலி வழங்கி மிகச் சிறப்பான கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் செல்வன் சு. சபினை நேரில் வாழ்த்தி…

பாடசாலை அதிபர் திரு. இராசையா நந்தகுமாரன் அவர்களின் முன்னிலையில், தாரணி சுப்பர் மார்க்கெட் யாழ் கிளை முகாமையாளர் திரு. இராசதுரை தனுஷன் அவர்களினால் இந்த உயரிய தங்கக் கைச்சங்கிலி முறைப்படி வழங்கி வைக்கப்பட்டது!

தாயக மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கண்டு, ஆண்டுதோறும் அவர்களைத் தேடிச்சென்று கௌரவித்து ஊக்கமளித்து வரும் தாரணி சுப்பர் மார்க்கெட் உரிமையாளர் திரு. சிவஞானம் ஸ்ரீகுகன் அவர்களின் இந்த மகத்தான அர்ப்பணிப்புக்கு, கல்விச் சமூகமும் அப்பகுதி மக்களும் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்!

சாதனை படைத்த செல்வன் சபினின் எதிர்காலம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! கல்விக்குத் தோள் கொடுக்கும் தாரணி சுப்பர் மார்க்கெட் நிர்வாகத்திற்குப் பாராட்டுக்கள்!

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!