2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!

ஜா எல – மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!