எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!

ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதனின் மறைவு, ஈழத் தமிழர்களின் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆரம்ப காலகட்டங்கள் முதல், போருக்குப் பின்னரான இற்றைவரையான காலப்பகுதி வரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும் மீட்சிக்காகவும் அவர் ஆற்றிய கைங்கரியங்கள் தமிழினத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியாக இணைந்து, பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, நகர சபை உறுப்பினராக மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக எனத் தான் வகித்த பதவிகள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கான தொண்டுரிமையாக மாற்றியவர் அண்ணன் சிவாஜிலிங்கம்.

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியத்தின் மீதான சமரசமற்ற பற்றுறுதியைக் கடைசி மூச்சு வரை கட்டிக்காத்த ஒரு உண்மையான தியாகியாகவே அவர் வாழ்ந்தார்.

எத்தனை சவாலான நெருக்கடிகள் சூழ்ந்தபோதும், தன் மீது ஆயுத முனையில் பலமுறை மிரட்டல்கள் எழுந்த நேரத்திலும், ஏனைய தரப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சற்றும் பின்வாங்காது தமிழ்த் தேசியப் பரப்பில் நெஞ்சுரத்தோடு நின்றவர் சிவாஜிலிங்கம் அண்ணன்.

அச்சமற்ற துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவும், சமரசமற்ற அரசியல் போராளியாகவும் மக்கள் மத்தியில் நின்று இறுதிவரை செயற்பட்ட அவரது ஆளுமை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

அரசியல் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல, அது மக்களுக்காகக் களங்களில் நிற்பது என்பதை அவர் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசியப் பற்றுடனும், தியாகத்துடனும் வாழ்ந்து மறைந்த அண்ணன் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை ஆழமாக நேசித்த அனைத்துத் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?