இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!

நுவரெலியா – தலவாக்கலை A-7 பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போர்ட் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்குள்ளான ஒரு பேருந்து சிறைச்சாலைத் திணைக்களத்திற்குச் சொந்தமான பேருந்து எனவும், அது நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்த்திசையில் பயணித்த மற்றைய பேருந்து நுவரெலியாவிலிருந்து அக்கரப்பத்தனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

மேலும், இவ்விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?