கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?

‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு, டிரான்ஸ்வொர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்தின் திட்டத்திற்காக வழங்குவதற்கு உதவி செய்வதற்குப் பிரதிபலனாக 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நாமல் ராஜபக்ஷவின் தாயாரும் தந்தையும் கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பதால், அதனைச் விசேட காரணமாகக் கருதி அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என அவரது தரப்புச் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இந்தப் பிணை கோரிக்கைக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

எனினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு வழக்கின் காரணமாக நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிணை உத்தரவுக்கு எதிராகவே தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?