முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் நேற்று (22) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2024 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச சட்டவாதியால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலும் 1 வருடம் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!