உணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 25ஆம் திகதி தலைமுடியை திருத்துவதற்காக வீட்டைவிட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். 

பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட உடல் அவரது கணவருடையது என அடையாளம் காணப்பட்டது. 

இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!