வெடுக்குநாறிமலை பௌத்த மதத்திற்கு உரியது: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

வெடுக்கு நாறிமலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் உள்ள நினைவுச் சின்னங்கள் பௌத்த நினைவுச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இத்தகைய கட்டுமானங்கள் அந்த இடத்தின் தொல் பொருள் நிலப்பரப்பை சேதப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எவரேனும் இந்த இடத்தில் மத வழிபாடுகளைச் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது தொல்பொருட்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது.

தொல்பொருட்களை அழிப்பது சிதைப்பது இடமாற்றுவது அல்லது மாற்றுவது ஆகியவை தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட மீறல்களாகக் கருதப்படும்.

ஆகவே வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் – என்றார்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்