உகந்தை நோக்கிப் பயணிக்கும் ‘சுப்பிரமணி’: யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன் தெரிவிக்கையில்:

“சுப்பிரமணி இதுவரை மூன்று இடங்களில் சோர்வடைந்து சிகிச்சை பெற்றுள்ளது. இறுதியாக, விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்தபோதும், அது மிகவும் சோர்வடைந்திருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது தற்போது உகந்த மலையை நோக்கி தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

தொடர்ச்சியான பயணத்தினால் இந்த நாய் மிகவும் களைப்படைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் மக்கள் யோகட் மற்றும் பால் வழங்கியதால், அதன் உடலில் சீனியின் அளவு (Sugar level) அதிகரித்துள்ளது. இதனால் அதன் உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து இனிமேல் அதற்கு யோகட் கொடுப்பதையோ அல்லது அதைத் தூக்கி அழைத்துச் செல்வதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, சுப்பிரமணியால் தனது பயணத்தை உகந்த மலை வரை தொடர முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!