வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!

வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்