இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா – உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கொலைக்குப் பின்னர் பெக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்குப் பயண வசதிகளைச் செய்து கொடுத்தவரும் பெக்கோ சமனே என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தா கும்பலால் அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர், இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!