யாழில் சோகம்: புற்றுநோயின் வீரியம் தாங்க முடியாது இளம் குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து மரணம்!

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் புற்றுநோய் வியாதியால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவையடிக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் மீது பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலமானது ரயிலில் எடுத்து செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்