“அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!”

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி, வீதிகளில் ஒன்று கூடும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டங்களில் சிறியளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். எனினும் பாரியதொரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

அநுர அரசாங்கத்திற்கு நெருக்கடி என்ற தொனிப்பொருளில் தீப்பந்தங்களை ஏந்தி நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதற்கமைய, ஜன அரகலய புருவசியோ என்ற அமைப்பினால் நேற்று மாலை பொரளை சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய சில அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.

அதற்கமைய, மாலபே பேருந்து நிலையத்திற்கு அருகிலும் தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், தெஹிவளை – கல்கிஸ்ச ஆகிய பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மஹரகம மற்றும் ராஜகிரிய நகரங்களிலும் இவ்வாறான தீப்பந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது போன்று அநுரவையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்கள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.

கோட்டா கோ ஹோம் போராட்டம் நாடளாவிய ரீதியில் தீவிரம் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!