யாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார்.

அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை கயிற்றுடன்  கிணற்றில் இறக்கிய போது கால் தடுமாறிய நிலையில் சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளான்.

கிணற்றில் அதிகளவு நீர் நிறைந்து காணப்பட்டமையால் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தோப்பு பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பிரதீபன் தர்சன் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி – யாழ் நிருபர் பிரதீபன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!