பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து : 21 பேர் படுகாயம்

சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்து ஓட்டுநர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!