மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தினால் தாயை கொலை செய்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ( 17.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 19 வயதுடைய மகன் தனது தாயாரிடம் மதுபானம் அருந்துவதற்கு ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ள நிலையில் தாயார் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோபமடைந்த மகன் தாயாரை பிடித்து தள்ளியதையடுத்து, அவர் தரையில் தலையடிக்க வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4ம் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!