யாழ், நெடுந்தீவு கடற்பகுதியில் 27 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது.

மன்னார், வான்கலை மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 121 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைதானவர்கள் 19 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு டிங்கி படகுகள், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
school boy death
தலைநகரில் பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!
jaffna
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு!
northern province
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
power cut
மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?
airport
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!