இஸ்ரேலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் : இஸ்ரேல் கண்டனம்

“மனிதகுலத்தின் சாபம்” என இஸ்ரேலைக் குறிப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் ஸார் “யூத அரசை, புற்றுநோய் என்று கூறுவது, அதன் அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் அமைச்சரின் கூற்று மூர்க்கத்தனமானது. இது எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் குறிப்பாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தம் வகிப்பவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அரசாங்கம் சொல்லக்கூடிய கூற்று அல்ல” என்று இஸ்ரேல் பிரதமரான நெதன்யாகுவின் அலுவலகம் பதிலளித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து வரும் இந்த அப்பட்டமான யூத விரோத இரத்த அவதூறு வார்த்தைகளை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கடுமையாக சாடுகிறார்.

இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் என்றும் கிடியான் ஸார் கூறியுள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வரும் இந்நாட்களில் கடந்த புதன்கிழமை (8) முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

ஈரான் அமெரிக்கா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வரும் இந்நாட்களில் கடந்த புதன்கிழமை (8) முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கண்டித்ததையடுத்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Qatar
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 54 பேர் காயம், 18 தொழிலாளர்களைக் காணவில்லை!
Singer Sathyan
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!
Suresh Saleh
பிள்ளைகளைப் பின்தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சி: பாதுகாப்பு கோரும் சுரேஷ் சலேயின் மனைவி
us-iran-swiss
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் முதலாம் நாள் அமர்வு நிறைவு!
protest london
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்
NEWS
நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!