கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 54 பேர் காயம், 18 தொழிலாளர்களைக் காணவில்லை!

கத்தாரில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வளைகுடா நாடான கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு ஆலையில் நேற்று இரவு ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன்18 பேர் மாயமாகியுள்ளதாக கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளதுடன், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் விபத்தின் போது ஆலைக்குள் இருந்த 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளதுடன், மீட்புக் குழுவினர் ஆலையின் இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இந்த ஆலை கடுமையாக சேதமடைந்து, பல வாரங்களாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக பொறியாளர்கள் ஆலையைத் திறக்க முயன்ற போது ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வெடிவிபத்து, உலகளாவிய எரிசக்தி சந்தைகளை மேலும் சீர்குலைக்கக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்