ஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 14 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பு!

ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரானின் ஷான்சஜ் நகரில், புரட்சிகர காவல்படை தளம் அருகே நேற்று(01) இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் பலியாகியுள்ளனர்.

ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெடிக்காமல் இருந்த குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈரான் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஷான்சஜ் நகரில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, முன்னர் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டு ஒன்று வெடித்ததன் விளைவாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட மோதல், கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், போரின் பிந்தைய விளைவுகள் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சம்பவத்தின் துல்லியமான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்