மத்திய கிழக்கில் பதற்றம்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், முக்கிய இடங்களை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.

தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!