காசோலை மோசடி வழக்கு: பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், நிதியாளர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார்.

இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கை நடிகர் விமல் மீது நிதியாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் .

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். இதன்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே, அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையை விதிப்பதாகவும், வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!