கொழும்பு குற்றப் பிரிவு நடவடிக்கை: கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பில் இஷாரா செவ்வந்தியிடம் மேலதிக விசாரணை

கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை இன்று (28) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்வைக்கப்பட்டது.

கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தியிடம் இருந்து மேலதிக வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்படி, எதிர்வரும் 2ஆம் திகதி அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், சிறைச்சாலை அதிகாரிக்கு அறிவித்து, வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!