காங்கேசன்துறை சுங்கச் சாவடியில் பிடிபட்ட தங்கம்: 11 பேருக்கு செப்டெம்பர் 9 வரை விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19 பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று (27) மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், சந்தேக நபர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!