மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி!

மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (22) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த ராணுவ வீரர் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் ஜெயதிலக்க (வயது- 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த தோடு,அங்கு கடமையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பொறுப்பாக இருந்து கடமைக்கான துப்பாக்கிகளை வினியோகித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து வினியோகிக்க முற்பட்ட போதே குறித்த துப்பாக்கி இயங்கிய நிலையில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்து ராணுவ வீரரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்