இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வணிகர்கள் கடன் அல்லது பற்று அட்டைகள் உட்பட வெளிநாட்டு நாணய கணக்குகளில் பணம் செலுத்துவதற்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

உள்ளூர் வணிகருக்கு வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் எந்தவொரு குடியிருப்பாளரும் அல்லது அங்கீகாரமின்றி அத்தகைய கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு வணிகரும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி ஒரு குற்றத்தைச் செய்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், ரூ. 25 மில்லியன் வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும்.

கடுமையான சட்ட விளைவுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் வணிக சமூகம் இந்த சட்டப்பூர்வ தேவைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!