உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை!

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகள் பலவற்றில் நிதி மோசடிகள் உள்ளிட்ட முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதால், அவற்றை சரியான முறையில் நெறிமுறைப்படுத்தி உரிய முறையில் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நிலைமையால் பொதுமக்களின் நன்மைக்காக அமைக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் படிப்படியாக மக்களிடமிருந்து விலகிச் சென்று வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே அவற்றால் பயனடைந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தற்போது பொதுமக்களுக்கு உப்புத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், சந்தையில் உப்பு விலை அதிகரிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால்,எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுத் தொடர்பில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கு விளக்கமளித்தனர்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kanavan manavi
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
15 people died in Sri Lanka in 24 hours
இலங்கையில் 24 மணி நேரத்தில் 15 பேர் பலி.
skynews-hospital-beer-sheva_6945606
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!
baba
காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
nari
நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!
tna
தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..