அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி, பின்னர், அந்த கப்பலை முழுமையாக அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததற்கு நேரடி பதிலடியாக, இந்த ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஈரான் தஸ்னிம் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்க கப்பல்களின் மீது நடத்திய தாக்குதலின் முழு விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தாக்கிய ஈரான் ட்ரோன்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ கப்பல்களின் எண்ணிக்கை, அவற்றில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய அறிக்கையினை தஸ்னிம் பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த Touska என்ற ஈரானிய கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை அந்தக் கப்பல் மீற முயன்றதாகவும் தற்போது Touska கப்பல் அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதற்கு தகுந்த பதில் தாக்குதல் நடத்தும் விதமாகவே, தற்போது அமெரிக்க இராணுவ கப்பல்களை தாக்கியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!