11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை!

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!