சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (21.07.2026) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மதிவதனி மற்றும் பல கட்சிகளின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கலாநிதி க.சர்வேஸ்வரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமகால அரசியல் நிலவரம், செம்மணியில் அகழப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நாடுகளின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது விசேடமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!