தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்ட முழு இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறியமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மூன்று பிரதிவாதிகளைப் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்றம் இன்று 26, 2026 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த ஐவருக்கும் கடந்த மார்ச் மாதம் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் 20 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டை உரிய முறையில் செலுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ShootingIncident
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!
CigarettePrices
உலகிலேயே மிக அதிக விலையுள்ள சிகரெட் கொண்ட நாடாக இலங்கை: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வில் வெளிவந்த தகவல்!
PrisonShooting
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!
NamalRajapaksa
"தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு": நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!
UKTamils
பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!