பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!

கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (1) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விளக்கமறியல் கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன, குறித்த கைதி சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

7 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் ஒரு வார காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைதி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவே கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவரது குடும்ப உறவினர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானவர் என்றும், அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ShootingIncident
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!
CigarettePrices
உலகிலேயே மிக அதிக விலையுள்ள சிகரெட் கொண்ட நாடாக இலங்கை: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வில் வெளிவந்த தகவல்!
PrisonShooting
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!
NamalRajapaksa
"தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு": நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!
UKTamils
பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!