களனி பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் தீ விபத்து சம்பவமொன்று இன்று காலை (03) ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடுதி அறையில் இருந்த மாணவிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நடந்த நேரத்தில் அந்த அறையில் மாணவிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
