திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் கடற்படைச் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் சாரதியாக இருந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

காயமடைந்த 28 மற்றும் 38 வயதுடைய ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்த நபர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ரி-56 (T-56) ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ShootingIncident
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!
CigarettePrices
உலகிலேயே மிக அதிக விலையுள்ள சிகரெட் கொண்ட நாடாக இலங்கை: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வில் வெளிவந்த தகவல்!
PrisonShooting
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!
NamalRajapaksa
"தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு": நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!
UKTamils
பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!