“இதுதான் அரசியல் பழிவாங்கல்”: 2010 அனுபவத்தை நினைவு கூர்ந்த அநுர குமார திஸாநாயக்க

2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, சரத் பொன்சேகாவை கைது செய்தனர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது..

2010இல் நானும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். சரத் பொன்சேகாவும் அப்போதே கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.

அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றனர். இதுதான் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!