சமையலறையில் சாப்பிட்ட புளியம்பழம் விபரீதமானது: சிறுமியின் உயிரைப் பறித்த சோக சம்பவம்

புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கலகஹா, நில்லம்ப – குருக்கலே பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான சனுதி லக்ஷானி என்ற 07 வயதுடைய சிறுமியாவார்.

நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த சிறிதளவு புளியம்பழத்தை எடுத்து உண்ண சிறுமி முயற்சித்துள்ளார்.

இதன்போது புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும், வீட்டில் இருந்த தாய் உட்பட உறவினர்கள் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் லொறி ஒன்றின் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!