யாழ்ப்பாணம் நாகர்கோயில் முருகன் ஆலயத்தில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முருகையா தேவஸ்தானத்தில்’ மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் போது இந்த ஏலம் நடத்தப்பட்டது.

இதில் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவியதை அடுத்து, மாம்பழம் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே திருவிழாவில் மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இம்முறை அந்தத் தொகை மேலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஏலம் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையானது ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!