செம்மணியில் கிடைக்கும் புகைப்படங்களை இனி Ai மூலம் மீளுருவாக்க தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணியில் கிடைக்கும் புகைப்படங்களை இனி Ai மூலம் மீளுருவாக்க தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை! #JaffnaNewsToday #jaffnatamilnewstoday #srilankatiktok #tranding #viralnews #srilankatiktok #viralvideos #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #trendingpost #jaffna

Posted by A7tv News on Monday, June 30, 2025

செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது 

இதுவரையான அகழ்வில்

33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் இன்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால் இன்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால்

குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
பாழடைந்த வீட்டிற்குள் சிக்கிய பல ஆண்டுகள் பழமையான எலும்புகூடு!
hritharan
செம்மணி புதைகுழி தொடர்பில் சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
08e7400e-bddb-4a8b-bab8-b633133448c7
புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு வெளிநாடொன்றின் தலைநகரில் சிலை!
arugambe
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!
eggs-thrown-at-devotees-during-rath-yatra-in-canada-india-slams-despicable-attack-demands-action
கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் : இரத யாத்திரையில் நடந்த அசம்பாவிதம்
c (3)
முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி