யாழில் வீதியில் விழுந்து கிடந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த பார்த்தீபன்!

யாழில் வீதியில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து சுன்னாகம் பொலிஸார் ஊடாக உரியவரிடம் சேர்ப்பித்த நெகிழ்வான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணம் ஒன்று கீழே விழுந்து காணப்பட்டது. குறித்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த குப்பிளான் பகுதியை சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் அதனை சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

அதன்பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியை சேர்ந்த முதியவரை கண்டுபிடித்தனர்.

அதன்பின்னர் அந்த முதியவரை அழைத்து நகையை கண்டெடுத்த பார்த்தீபனின் கையாலேயே அந்த நகையை முதியவரிடம் ஒப்படைத்தனர்.

வீதியில் கண்டெடுக்கப்பட்ட நகையை நேர்மையாக உரியவரிடம் சேர்ப்பித்த பார்த்தீபனின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!