🔴 VIDEO வேண்டியது உடனே நடக்கும் “பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம்” – படையெடுக்கும் மக்கள்

மன்னார் – சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் 03.06.2025 சிறப்பாக நடைபெற்றது.

மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை. அந்தவகையில் இன்றையதினம் திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அந்தோனியாரை தரிசித்து சென்றனர்.

மேலும், பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப்பேறு வேண்டி தொட்டில்களை கட்டுவதையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியபடியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது. இதனால் கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்ளும் இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

செய்தி – பு.கஜிந்தன்

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!