பணம் மற்றும் நகைகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்: லண்டன் வாழ் தமிழர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.

திருட்டுச் சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!